இன்றைய ராசி பலன்கள் 5/3/2021

இன்றைய ராசி பலன்கள் 5/3/2021

மேஷம்

முக்கிப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். முன்னேற்றம் கூடும். மங்கல நிகழ்ச்சி மனையில் நடைபெறும் சூழ்நிலை உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம்

முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட தொல்லை அகலும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்

மிதுனம்

அனுபவ அறிவால் அற்புதமான பலன் கிடைக்கும் நாள். வாங்கல்-கொடுக்கல்களில் வளர்ச்சி கூடும். நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்லகாரியம் நடைபெறும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்

வங்கிகளில் சேமிப்பு உயரும் நாள். வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். தொலைந்த பொருள் கைக்கு வந்து சேரும். வருமானம் பெருக புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.

சிம்மம்

வரன்கள் வாயில் தேடி வரும் நாள். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். செல்வந்தர்களின் உதவியோடு சில பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முன்வருவீர்கள்.

கன்னி

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களை நம்பிச்செயல்பட  இயலாது. சொத்துகளில் பிரச்சினைகள் ஏற்படலாம். சொந்தங்கள் பகையாகலாம். திருமணமுயற்சி கைகூடும்

துலாம்

விரோதங்கள் ஏற்படும் நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். மருத்துவச் செலவு உண்டு. தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு குறையும். விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாளவும்

விருச்சகம்

நட்பு வட்டம் விரிவடையும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். நண்பர்களின் நல்லா தரவோடு தொழில் முயற்சியில் லாபம் காண்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்

தனுசு

சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். வருங்கால நலன் கருதி புதிய முயற்சி எடுப்பீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.

மகரம்

செல்வாக்கு உயரும் நாள். நண்பர்கள் உங்கள் பிரச்சினை தீர வழிவகுப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். விலகியிருந்த உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். தேக ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்

ஆதாயம் அதிகரிக்கும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வரலாம். உறவினர்கள் போற்றும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

மீனம்

முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். முன்னேற்றம் கூடும். மங்கல நிகழ்ச்சி மனையில் நடைபெறும் சூழ்நிலை உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.