சீனாவுக்கு கடும் எச்சரிக்கை: சீற்றம் கொண்டுள்ள ட்ரம்ப்

சீனாவுக்கு கடும் எச்சரிக்கை: சீற்றம் கொண்டுள்ள ட்ரம்ப்

சீனா உலக நாடுகளுக்கு கொரோனாவை தீவிரமாக பரப்பியதை பார்க்கும் போது நான் மேலும் கோபப்படுகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கொடிய தொற்றுநோய் அதன் அசிங்கமான முகத்தை உலகம் முழுவதும் பரப்புவதை பார்க்கும் போது நான் சீனா மீது மேலும் மேலும் கோபப்படுகிறேன்.

இத்தகைய செயற்பாடு அமெரிக்காவிற்கு மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்து வந்த காலங்களில் அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தொற்றுநோயை முழுமையாக கட்டுப்படுத்தவில்லை என்றும் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 26 இலட்சத்தை தாண்டியுள்ளது.

அமெரிக்க தொற்று நோயியல் நிபுணர் அந்தோனி பாசி கொரோனா பாதிப்பு நடவடிக்கையில் நாம் தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்றும் இப்போது நாம் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.