யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

யாழ்ப்பாணத்தில் இன்று 3 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது

அவர்களில் ஊர்காவற்துறையை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர் அடங்குவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து கடந்த வாரம் விடுவிக்கப்பட்டு காரைநகரில் உள்ள வீட்டில் சுய தனிமைப்படுத்த ஒருவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த மெலிஞ்சிமுனையைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்