இன்றைய ராசி பலன்கள்3.03.2021

இன்றைய ராசி பலன்கள்3.03.2021

மேஷம்

பணியாளர்களுக்கு மாற்றங்கள் விரும்பும்படி அமையும். நாள் முழுக்க மகிழ்ச்சிகரமான மனநிலையுடன் காணப்படுவீர்கள்.கணவனும் மனைவியும் பரஸ்பரம் உதவிகரமாக இருப்பார்கள்.

ரிஷபம்

உங்களை நீங்களே சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வீர்கள். வெளிநாட்டிலிருந்து வரும் செய்திகள் மகிழ வைக்கும்.   குடும்ப ஒற்றுமை பலப்படும். சந்திப்புகள் சுமுகமாக நடைபெறும்

மிதுனம்

பணியிடத்தில் முயற்சி செய்து சாதனை செய்வீர்கள்.
உடன்பிறந்தவர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்வில் முன்னேறுவது குறித்து சிந்திப்பீர்கள்.

கடகம்

வாழ்க்கைத்துணை மூலம் தேவையான உதவி கிடைக்கும் குடும்ப நபர் ஒருவரின் திருமணம் சிறப்பாக நடைபெறும்.  நலம் விரும்பும் நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

சிம்மம்

வருமானம் பற்றிய புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். தொழில் சுமாராக இருக்கும். மனம் மகிழும் சம்பவம் நடக்கும்.

கன்னி

மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீா்கள். முன்னேற்றம் உண்டு.  அக்கம் பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லையை சந்திப்பீர்கள். எளிதில் முடியும் விஷயத்தைக்கூட சற்றுப் போராடி முடிப்பீர்கள்.

துலாம்

மனச்சலனம் ஏற்படும். மகிழ்ச்சியான வாதம் வரும். நெருக்கமானவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள்.  சில விஷயங்களிலிருந்து ஒதுங்குவதால் நன்மை அடைவீர்கள்.

விருச்சகம்

உங்கள் செயல் ஒன்று மற்றவருக்கு ஆதங்கம் ஏற்படுத்தும்.  வாகனப்பழுதை சரிசெய்வது குறித்து யோசிப்பீர்கள்.  பொது மக்களிடையே புகழும் பெருமையும் அதிகரிக்கும்

தனுசு

பணியில் பல காரணங்களுக்காக நிறையப் பேச வேண்டி வரும்.  நண்பர்களால் பிரச்னை ஏற்பட்டாலும் மன்னிப்பீர்கள்.  சில புதுமைகளை செய்து பிறரின் கவனத்தை ஈர்ப்பீர்கள்

மகரம்

நன்மை செய்து புகழ் பெறுவீர்கள். நடுநிலையாக இருப்பீர்கள்.  சிலர் உங்களை விமர்சனம் செய்து சீண்டிப்பார்ப்பார்கள்.  உங்களின் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டி வரும்

கும்பம்

கோபத்தை கட்டுப்படுத்திச் செயல்பட்டு உயர்வீர்கள்.  வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உரையாடல்களில் ஈடுபடுவதால் உங்கள் புரிதல் அதிகரிக்கும்.

மீனம்

பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் சிரமம் ஏற்படும்.  நண்பர்களால் நன்மை உண்டு. சமூகத்தில் அந்தஸ்து உயரும்.  பணியாளர்கள் கடமையுணர்வுடன் செயல்படுவீர்கள்