பெண்கள் வாரத்தில் 4 முறை மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது

வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது இந்த நோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

உலகளவில் அதிகமாக உயிரிழப்பை ஏற்படுத்தும் முக்கிய நோய்களுள் ஒன்றாக புற்றுநோய் அமைந்திருக்கிறது. அதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறுவதும் சவாலான விஷயமாக இருக்கிறது. ஒருசில உணவு வகைகளை தவறாமல் சாப்பிட்டு வருவதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும். பூண்டிற்கு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி இருக்கிறது. மார்பகம், மூளை, நுரையீரல், கணையம், வயிறு போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதை இது தடுக்கும். பிரோக்கோலிக்கும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. அதை நீராவியில் வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது. அதில் சூப், சாலட் தயாரித்தும் சாப்பிடலாம்.

சிட்ரஸ் பழ வகைகளை தினமும் சாப்பிட்டு வருவது வாய், தொண்டை, வயிற்று புற்றுநோய் வராமல் தடுக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக எலுமிச்சம் பழத்தை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். காலை உணவுடன் அரை கப் புளூபெர்ரி பழம் சாப்பிட்டும் வரலாம். அது புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தி சேதமடைந்த செல்களின் வளர்ச்சிக்கு துணைபுரியும்.

வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது ரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில்தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் கருப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். தினமும் இரண்டு கப் கருப்பு டீ பருகுவதும் நல்லது. கிவி பழத்திலும் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்சிடெண்ட் நிரம்பியுள்ளது. அதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.

வெங்காயத்தை தவறாமல் உணவில் சேர்ப்பதன் மூலம் 50 சதவீத புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். ஆப்பிளுக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை இருக்கிறது. அவகோடா, முளைகட்டிய தானியங்கள், முட்டைக்கோஸ், தக்காளி, கேரட், செர்ரி பழம், மக்காச்சோளம், பேரீச்சம்பழம், முட்டை, இஞ்சி, திராட்சை, காளான், பட்டாணி, மாதுளை போன்றவற்றை சாப்பிட்டு வருவதும் புற்றுநோயை தடுக்க உதவும்