இன்றைய ராசி பலன்கள்2.03.2021

இன்றைய ராசி பலன்கள்2.03.2021

மேஷம்

கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். குடும்பத்தாருடன் குதுாகலப் பயணமொன்று செல்ல நேரிடலாம். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்

ரிஷபம்

பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். அயல்நாட்டிலிருந்து அனுகூலமான தகவலொன்று வந்து சேரும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். சகோதர சச்சரவு அகலும்.

மிதுனம்

மனநிறைவு ஏற்படும் நாள். வீடுகட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சி கைகூடும். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். சொந்த பந்தங்களின் உதவி கிடைக்கும்.

கடகம்

பிற இனத்தாரால் பெருமை சேரும் நாள். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். தந்தை வழி அனுகூலம் உண்டு. தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்

சிம்மம்

கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். மணவிழா, மணிவிழா போன்ற சுபகாரியப் பேச்சுகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்

கன்னி

நட்புவட்டம் விரிவடையும் நாள். பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ்சேர வழிவகுத்து கொள்வீர்கள். தொழில் ரீதியாகப் பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்

துலாம்

முன்னேற்றம் கூட முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும்.

விருச்சகம்

அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக ஏற்பட்ட பஞ்சாயத்துகள் சாதகமாக முடியலாம். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

தனுசு

மங்கலச் செய்தியொன்று மனை தேடி வந்து சேரும் நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்துதவுவர். பழைய வாகனத்தைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும்.

மகரம்

உற்சாகத்தோடு செயல்படும் நாள். உத்யோகத்தில் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இணக்கத்தோடு நடந்து கொள்வர்

கும்பம்

சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். உறவினர்களால் அன்புத் தொல்லைகள் ஏற்படும். உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. தொழில் ரீதியாக சில குழப்பங்கள் தோன்றி மறையும்

மீனம்

கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். குடும்பத்தாருடன் குதுாகலப் பயணமொன்று செல்ல நேரிடலாம். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.