காவல்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவினரின் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் இரகசிய வாக்குமூலம்

காவல்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவினரின் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் இரகசிய வாக்குமூலம்

காவல்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட போதை பொருளை மீள வர்த்தகர்களுக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பான வழக்கின் 16வது சந்தேகநபர் இன்று நீதிமன்றில் 2 மணித்தியால ரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் இன்று விசாரரணக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது இவ்வாறு வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவத்தின் 17வது சந்தேகநபரிடம் நாளைய தினம் ரகசிய வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

இதேவேளை குறித்த வழக்கின் 17 சந்தேகநபர்களையும் அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரையில் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் காவல்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது