கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

நேற்று (22) முதல் இன்று (23) காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 518 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது.

இவர்களில் 28 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

ஏனைய 490 பேரில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 175 பேர், கம்பஹா மாவட்டத்தில் 77 நபர்கள், கண்டி மாவட்டத்தில் 41 பேர், மன்னார் மாவட்டத்தில் ஒருவர், மாத்தளை மாவட்டத்தில் 26 பேர், புத்தளம் மாவட்டத்தில் இருவர், நுவரெலியா மாவட்டத்தில் 13 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவர், யாழ். மாவட்டத்தில் மூவர், கிளிநொச்சி மாவட்டத்தில் மூவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கோட்டையில் 07 நபர்களும் கொம்பனித்தெரு பகுதியில் நால்வரும் பம்பலப்பிட்டியில் மூவரும் வௌ்ளவத்தை பகுதியில் நால்வரும் மருதானையில் 07 பேரும் புறக்கோட்டையில் 08 பேர், கொட்டாஞ்சேனையில் ஐவரும் மட்டக்குளி பகுதியில் 09 பேரும் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

வத்தளை பகுதியில் ஐவர், நீர்கொழும்பில் நால்வர் அடங்கலாக கம்பஹா மாவட்டத்தில் 77 தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

தங்கொட்டுவ மற்றும் வென்னப்புவ ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் புத்தளம் மாவட்டத்தில் இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பகுதியில் ஒருவருக்கும் பூநகரியில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பிரதேசத்தில் இருவருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நால்வருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று (23) காலை வரையில் நாட்டில் மொத்தமாக 80,517 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 75,110 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதனிடையே, நேற்றைய தினம் (22) 5 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நுகேகொடை, கொழும்பு – 13, கொழும்பு – 12, தூனகஹ மற்றும் மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த ஐவரே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை 450 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

நாட்டில் முன்னெடுத்துச் செல்லப்படும் 97 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 9,618 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 11,779 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.