கடவுச்சீட்டை தவறவிட்டதால் மே.இந்திய தீவுகளுக்கு பயணமாவதில் தசுன் சானக்கவுக்கு சிக்கல்

கடவுச்சீட்டை தவறவிட்டதால் மே.இந்திய தீவுகளுக்கு பயணமாவதில் தசுன் சானக்கவுக்கு சிக்கல்

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணிக்கும் டெஸ்ட் குழாமில் தசுன் சானக்க பெயரிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும், விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, நேற்று பயணமான இலங்கை குழாமுடன் அவர் பயணித்திருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது கடவுச்சீட்டை தவறவிட்டதன் காரணமாக அவரால் விசாவை பெறமுடியாமல் போயுள்ளது.

இந்த விசா சிக்கலை நிவர்த்தி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இந்த விசா பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன் விரைவில் அவர் இலங்கை அணியுடன் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது