வெள்ளைவானில் வந்த குழு அதிகாலைவேளை நித்திரையில் இருந்த யுவதியை கடத்தியது

வெள்ளைவானில் வந்த குழு அதிகாலைவேளை நித்திரையில் இருந்த யுவதியை கடத்தியது

வெள்ளைவான் ஒன்றில் வந்த குழுவினரால் நித்திரையில் இருந்த யுவதி ஒருவர் அதிகாலைவேளை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலேயே இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காதான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி ஜுனியர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இரு பெண் பிள்ளைகள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை ஒரு மணிக்கும் 1.30 மணிக்கும் இடையில் வெள்ளைவான் ஒன்றில் வந்த குழுவினர் வீட்டின் வெளிக்கதவின் பூட்டினை உடைத்து வீட்டின் வாசல்கதவை உடைத்து உள்நுழைந்த போது வீட்டின் உரிமையாளர் அவர்களை பொல்லால் தாக்கிய போதும் அவர்கள் அவரை திருப்பி தாக்கிவிட்டு நித்திரையில் இருந்த 21 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்