யாழ்.போதனா வைத்தியசாலையில் தாதியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று!

யாழ்.போதனா வைத்தியசாலையில் தாதியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சை பிரிவின் பொறுப்புத் தாதிய உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று காலை அன்டிஜன் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நோயாளி ஒருவருக்கும் தொற்று உள்ளமை அன்டிஜன் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட இருவரின் மாதிரிகளுடன் மேலும் சிலரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன. பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மாலையே வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை முன்னெடுக்கபட்ட அன்டிஜன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே தாதிய உத்தியோகத்தர் மற்றும் நோயாளி ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நோயார்களைப் பார்வையிட வருபவர்களுக்கு தடை விதிப்பது தொடர்பிலும் ஏற்கனவே வந்த சென்றவர்கள் தொடர்பிலும் தகவல் திரட்டப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இத தொடர்பில் வைத்தியசாலை நிர்வாக மட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.