இத்தாலியில் இருபது வருடங்களுக்கு மேல் வசித்து வந்த இலங்கையர் இருவர் கொரோனாவால் மரணம்

இத்தாலியில் இருபது வருடங்களுக்கு மேல் வசித்து வந்த இலங்கையர் இருவர் கொரோனாவால் மரணம்

இத்தாலியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமது குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள் இருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியின் மிலான் மற்றும் ரோம் நகரில் வசித்து வந்த குடும்பத்தலைவர்களே உயிரிழந்தவர்களாவர்.

கொட்டாவ பகுதியைச் சேந்த 57 வயதுடையவர், கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவரும், கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன