இலங்கைத் தமிழருக்காக மோடி முன்னிற்பார் - ராஜ்நாத் சிங்

இலங்கைத் தமிழருக்காக மோடி முன்னிற்பார் - ராஜ்நாத் சிங்

இலங்கையில் தமிழர்கள், சமாதானம், சமத்துவம் மற்றும் கௌரவத்துடன் வாழ்வதை உறுதிசெய்வதற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என்று, அந்தநாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்த போது, யாழ்ப்பாணத்துக்கும் சென்றிருந்தார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த முதலாவது இந்திய பிரதமர் என்ற பெயரையும் அவர் பெற்றார்.

தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட உறவு இருக்கிறது.

அவர் இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

இந்திய அரசாங்கம், இலங்கையில் யுத்தப்பாதிப்புக்கு உள்ளான மக்களுக்காக 27,000 வீடுகளை நிர்மாணித்துள்ளது என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்