இன்றைய ராசி பலன்கள் 21/02/2021

இன்றைய ராசி பலன்கள் 21/02/2021

மேஷம்

வளர்ச்சி கூடும் நாள். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். தொல்லை தந்த வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.வியாபார விரோதங்கள் விலகும்.

ரிஷபம்

பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். வீண் விரயங்கள் ஏற்படலாம். அனாவசியச் செலவுகள் அதிகரிக்கும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படலாம்.

மிதுனம்

வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டும் எண்ணம் மேலோங்கும். மதிப்பும்,மரியாதையும் உயரும். பயணம் பலன் தரும் விதம் அமையும்

கடகம்

தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். கொடுத்த பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். இனிய சம்பவமொன்று இல்லத்தில் நடைபெறும். உயர்மட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சிம்மம்

தொழிலை விரிவுபடுத்த தொகை வந்து சேரும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கை நடைபெறும். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.

கன்னி

இனிமையான நாள். இல்லம் தேடி நல்ல செய்தி வந்து சேரும். பிரியமான நண்பர்கள் நீங்கள் கேட்ட பொருட்களை வாங்கிக்கொடுப்பர். பணியாளர்களுடன் இருந்த பனிப்போர் விலகும்.

.துலாம்

பற்றாக்குறை அதிகரிக்கும் நாள். பணத்தேவைகள் கடைசிநேரத்தில் பூர்த்தியாகும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்க மறுப்பர். கொடுக்கல்-வாங்கல்களில் கவனம் தேவை

விருச்சகம்

அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். அடுத்தவர்நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். தொழில்முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்

தனுசு

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சகோதர வழியில் நன்மை உண்டு. எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிரியமானவர்களுடன் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

மகரம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எதையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். ஆடம்பரப்பொருட்களை வாங்கி மகிழும்வாய்ப்பு உண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கும்பம்

கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். பூர்வீக சொத்தை விற்றுப் புதிய சொத்துக்களை வாங்கும் எண்ணம் மேலோங்கும்.

மீனம்

தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். நண்பர்களின் சந்திப்பால் நலன் காண்பீர்கள். குடும்பவருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மை  உண்டு.