சாத்தான் குளம் கொலைச் சம்பவம் குறித்து 16 மணிநேரம் விசாரணை!

சாத்தான் குளம் கொலைச் சம்பவம் குறித்து 16 மணிநேரம் விசாரணை!

சாத்தான் குளம் சம்பவம் குறித்து பொலிஸ் நிலைய காவலர்களிடம் 16 மணிநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

நேற்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகிய குறித்த விசாரணை அதிகாலை 4 மணிவரை நீடித்துள்ளாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விசாரணையில் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகாத நிலையில் பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பு கமெராவை நீதிபதி பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சிறையில் உயிரிழந்த சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் மரண வழக்கு விசாரணையை சி.பி.ஐ. விசாரணைப் பிரிவுக்கு மாற்றுவதற்கு உயர் நீதிமன்றில் கோரவுள்ளதாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.