எண்ணெய் ஆலையில் பணிபுரிந்த நபர் கல்லால் தாக்கப்பட்டு கொலை

எண்ணெய் ஆலையில் பணிபுரிந்த நபர் கல்லால் தாக்கப்பட்டு கொலை

தங்கொட்டுவ - எட்டியாவல பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மாமனாரை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.

ஹெரோயின் போதைபொருள் கையகத்தில் வைத்திருந்த காரணத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஜனவரி 22 ஆம் திகதி பிணை மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எண்ணெய் ஆலையில் பணிபுரிந்த 66 வயதுடைய குறித்த நபர் தனது மகளை சந்தேக நபரிடமிருந்து விவாகரத்து செய்வதற்கு  தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதுவே  வாக்குவாதத்திற்கு முக்கிய காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்