கொழும்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 238 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 27, 761 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 162 நோயாளர்களுடன் அந்த மாவட்டத்தில் இதுவரை பதிவான கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 15,155 ஆக உயர்வடைந்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் 68 பேரும், கண்டியில் 32 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 38 பேரும், இரத்தினபுரியில் 45 பேரும், புத்தளத்தில் 39 பேரும், நுவரெலியாவில் 38 பேரும், கிளிநொச்சியில் 20 பேரும் கொவிட் 19 நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

அதேநேரம், அம்பாறையில் 12 பேரும், காலி மாவட்டத்தில் 14 பேரும், மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் தலா 13 பேரும் மாவட்ட ரீதியில் அதிகளவான கொவிட் 19 நோயாளர்கள் நேற்று பதிவாகியிருந்தனர்.

இதேவேளை, அப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30 பேருக்கு இன்றைய தினம் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர் ரோய் விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு இன்று பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்