சீனாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பலர் அடையாளம்..

சீனாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பலர் அடையாளம்..

புதிதாக பல கொரோனா வைரஸ் தொற்றுதியானவர்கள் இன்று சீனாவில் இனம் காணப்பட்டதனை அடுத்து மக்களின் நடமாட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.

 

தலைநகருக்கு அருகாமையில் உள்ள பிரதேசத்தை சேர்ந்த 5 லட்சம் மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.

 

சீனாவில் தொற்று கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில் தலைநகர் மற்றும் அதனை அண்டியுள்ள ஹேபீ மாகாணத்தில் தொற்று மீண்டும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வுஹானில் தொற்று அபரிமிதமாக பரவிய காலப்பகுதியினில் மேற்கொள்ளப்பட்ட உறுதியான நடவடிக்கைகள் போன்று தற்போது புதிய தொற்று ஏற்பட்ட பிரதேசங்களிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீன சுகாதார துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

 

கடந்த 24 மணி நேர காலப்பகுதியினில் 14 புதிய தொற்றுதியானவர்கள் இனம் காணப்பட்டனர்.

 

இந்த நிலையில் இந்த மாத நடுப்பகுதி வரையில் சீனாவில் 311 புதிய தொற்றுதியானவர்கள் பதிவாகியுள்ளனர்.

 

மீண்டும் சீனாவில் தொற்று பாரிய அளவில் பரவாமல் இருக்க சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக சீனாவின் உத்தியோகபூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது.