கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை

கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளேயே முடங்கிக்கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. போதிய வருமானம்,வேலைவாய்ப்பு இல்லாம் மக்கள் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த பொருளாதார காரணங்களால் பலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை, சண்டை என பல ஆபத்தான முடிவுகளை எடுத்து வருகின்றனர். மேலும், வீட்டிலேயே இருப்பதால் கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு குடும்ப வன்முறை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முன்னர் 60 தற்கொலைகளும், 850 குடும்ப வன்முறை தொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் 100 தற்கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், 1,500 குடும்ப வன்முறை தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லூதியானா துணை ஆணையர் அகில் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இந்த தற்கொலை, குடும்ப வன்முறை சம்பவங்கள் மன அழுத்தம், வேலைவாய்ப்பின்மை, பணப்பிரச்சைகளால் நடந்துள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளதாக சவுத்ரி தெரிவித்துள்ளார்.