அடுத்த அதிபர் ஜோ பிடன் தான்: கவலை வெளியிட்டுள்ள ட்ரம்ப்!

அடுத்த அதிபர் ஜோ பிடன் தான்: கவலை வெளியிட்டுள்ள ட்ரம்ப்!

அமெரிக்காவில் நடைபெற இருக்கின்ற அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அடுத்த அதிபராக வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டி இடுகிறார்.ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளார்.

சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி ஜோ பிடனுக்கு ஆதரவு வலுவாகவுள்ளன. மற்றொரு கருத்துக் கணிப்பில் மக்கள் செல்வாக்கை ட்ரம்ப் இழந்து வருகிறாரென தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பில் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய டொனால்ட் ட்ரம்ப் என்னை சிலருக்கு பிடிக்கவில்லை அதனால் அடுத்த அதிபராக ஜோ பிடன் வருவதற்கு வாய்ப்புள்ளதென தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழக்கமாக ஜனநாயக கட்சிக்கே ஆதரவாக இருப்பர். ஆனால் தற்போது 50 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் ட்ரம்புக்கு ஆதரவாக உள்ளனரென ஒரு கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதேவேளை இந்தியர்கள் மற்றும் இலட்சக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு ட்ரம்புக்கு உள்ளது. அதற்காக அவர் தன் நன்றியை தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்களிப்பை அவர் எப்போதும் பாராட்டத் தவறியதில்லையென வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா மத்யூஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.