இலங்கையர்களின் நெகிழ்ச்சி செயல்! நாட்டை விட்டு வெளியேற விரும்பாத வெளிநாட்டு பெண்

இலங்கையர்களின் நெகிழ்ச்சி செயல்! நாட்டை விட்டு வெளியேற விரும்பாத வெளிநாட்டு பெண்

இலங்கைக்கு பரிசோதனை நடவடிக்கைக்காக வந்த நெதர்லாந்து நாட்டு பெண் மீண்டும் தனது சொந்த நாட்டிற்கு செல்ல விருப்பம் இல்லாமல் போயுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 24 வயதான சின்டி ஹட்சி என்ற பெண் ஒருவர் தொடர்பான செய்தியே வெளியாகியுள்ளது.

குறித்த பெண் கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி இலங்கை வந்துள்ளார். தனது பட்ட படிப்பு ஆய்வற்கு தகவல் சேகரிப்பதற்காகவே அவர் இலங்கை வந்துள்ளார்.

“இலங்கை மக்களின் மனரீதியான சுகாதாரம்” என்ற தலைப்பிலேயே அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆனாலும் கொரோனா தொற்று காரணமாக அவரது ஆய்வு நடவடிக்கை தடைப்பட்டதுடன், சொந்த நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் அவற்றினை கருத்திற் கொள்ளாத இந்த பெண் தனது ஆய்வு தலைப்பை “கொரோனா நெருக்கடிக்குள் இலங்கை சமூகத்தின் அழுத்தம்” என மாற்றி கொண்டுள்ளார்.

பின்னர் அதற்காக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களின் ஆதரவை அவர் பெற்றுள்ளார். இரண்டு மாத காலமாக தனிமையை போக்கி அவருக்கு உதவுவதற்கு பேராசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டவர்,

“மார்ச் மாதம் 14ஆம் திகதி நான் கொழும்பிற்கு வந்தேன். அந்த காலத்திலேயே தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் கடும் சிரமமாக இருந்தது. எனினும் இந்த பரிசோதனை இவ்வளவு தூரம் மேற்கொள்ள முடியும் என என்னால் நம்ப முடியவில்லை. எனது ஆரோக்கியம் குறித்தும் எனக்கு அச்சம் காணப்பட்டது. எனினும் ஒரு சில நாட்களிலேயே நான் எனது வீட்டில் இருப்பதனை போன்று உணர்ந்தேன்.

அனைவரும் எனக்கு நிறைய உதவிகளை செய்தார்கள். நான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன். உங்களால் முடிந்தால் இலங்கையில் ஒரு முறையாவது வாழ்ந்து பாருங்கள். எனது ஆய்வு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

எனது நாட்டிற்கு எப்போது செல்ல கிடைக்கும் என எனக்கு தெரியவில்லை. ஆனாலும் நான் எனது நாட்டிற்கு செல்ல ஆர்வம் காட்டப்போவதில்லை. ஏன் என்றால் இங்கேயே எனது வீடு போன்று எனக்கு எண்ணம் ஏற்பட்டது. இதனால் நான் தொடர்ந்து இலங்கையில் இருப்பேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.