கொரோனா மருந்து கண்டுபிடிப்பில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் முன்னிலை- WHO

கொரோனா மருந்து கண்டுபிடிப்பில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் முன்னிலை- WHO

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்து கண்டுபிடிப்பில் பிரித்தானியாவைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ராஸெனேக்கா (AstraZeneca) மேம்பட்ட நிலையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, மொடேர்னா (Moderna) ஆராய்ச்சி நிலையத்தின் தடுப்பூசி ஆராய்ச்சி நம்பிக்கை அளிப்பதாக உள்ளதாக குறித்த அமைப்பின் தலைமை அறிவியலாளர் சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக்கான மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பில் உலகம் முழுவதும் 200 ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் 15 ஆராய்ச்சி அமைப்புக்கள் மனிதர்கள் மீதான பரிசோதனை என்ற கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ராஜெனேக்காவும் இணைந்து முன்னெடுக்கும் ஆராய்ச்சி குறித்து உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த ஆராய்ச்சியில் விரைந்து நல்ல முடிவு கிடைக்கும் என வாய்ப்பிருப்பதாக அறிவியலாளர் சௌம்யா சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.