மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்த கணவன்! விசாரணையில் வெளியான பின்னணி

மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்த கணவன்! விசாரணையில் வெளியான பின்னணி

கினிகத்தேனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை அம்பகமுவ மாபொத்தன பகுதியில் மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்த கணவனை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இம் மாதம் 27ம் திகதி புதன்கிழமை இரவு மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு அவருடைய இரண்டு பிள்ளைகளையும் அழைத்து கொண்டு வீட்டினை பூட்டிவிட்டு, தான் தனது மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு வந்துள்ளதாக தனது சகோதரனிடம் கூறியுள்ளார்.

அதனையறிந்த சகோதரன் உடனடியாக சென்று பூட்டபட்டிருந்த வீட்டினை திறந்து பார்த்த போது குறித்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்ததை அவதானித்துள்ளார். அதனையடுத்து பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தபோது சம்பவத்தில் பலியான பெண்ணுக்கும் வேறு ஒரு நபருக்கும் நீண்ட காலமாக கள்ளகாதல் தொடர்பு இருந்து வந்ததாகவும் இந்த விடயத்தினை அறிந்த பெண்ணின் கணவன் பலமுறை தமது மனைவிக்கு எச்சரிக்கை விடுத்து வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 27ம் திகதி காலை குறித்த பெண்ணை கள்ளகாதலன் நாவலபிட்டி பகுதிக்கு முச்சக்கர வண்டியில் அழைத்து சென்ற வேளை அவர்களை பின் தொடர்ந்த கணவன் நாவலபிட்டி பகுதியில் வைத்து இருவரையும் தாக்கி முச்சக்கர வண்டியினையும் சேதப்படுத்தியுள்ளார்.

அன்றய தினம் வீடு வந்த மனைவி கணவனை கொலை செய்வதற்கு கத்தியை கையில் எடுத்த போது அதனை கண்ட கணவன் ஆத்திரமடைந்து மனைவியின் கழுத்தை வெட்டிகொலை செய்துள்ளதாகவும் கொலை செய்யப்பட்ட பெண் 27 வயதுடைய இரண்டுபிள்ளைகளின் தாயான மாலவிகா பிரியதர்ஷினி என கினிகத்தேனை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரைவழைக்கப்பட்டு விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு மரண விசாரணைகள் ஹட்டன் நீதிமன்ற நீதவானின் தலமையில் இடம்பெறுகின்றது. சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.