ஸ்ரீலங்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா!

ஸ்ரீலங்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா!

ஸ்ரீலங்காவின் எல்லை மற்றும் கடலோரா பாதுகாப்பு பலவீனமானதாக காணப்படுகின்றது என அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் உலக நாடுகளில் காணப்பட்ட பயங்கரவாதநிலை குறித்த தனது வருடாந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

ஸ்ரீலங்காவின் எல்லைக்காவல் மற்றும் கடலோர பாதுகாப்பு தொடர்ந்தும் பலவீனமானதாக காணப்படுகின்றது.

ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகளுடனும் ஜப்பானுடனும் இணைந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் எல்லை முகாமைத்துவ நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா தனது கடல்சார் எல்லையை பாதுகாப்பதற்காக அமெரிக்காவுடனான தனது இணைப்பை விஸ்தரித்துள்ளது.

அமெரிக்க எல்லை காவல் படையினர் தொடர்ந்தும் ஸ்ரீலங்காவின் கரையோர ரோந்து படைப்பிரிவினருக்கும் ஸ்ரீலங்கா கடற்படையினருக்கும் கடல்சார் சட்டங்களை நடைமுறைப்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் கொள்களன் பாதுகாப்பு முயற்சிகள் மூலம் அமெரிக்காவின் சுங்க திணைக்களம் எல்லை பாதுகாப்பிற்கு தனது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.

அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களம் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா கடற்படையின் விசேட படகுப்படைப்பிரிவு மற்றும் அதிவேக தாக்குதல் பிரிவுடன் இணைந்து செயற்படுவதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.