விசாரணைக்காக அழைக்கப்படவுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி வீரர்கள்

விசாரணைக்காக அழைக்கப்படவுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி வீரர்கள்

ஆட்ட நிர்ணய விவகாரம் குறித்து உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி வீரர்களை விசாரணை செய்ய விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க விளையாட்டுத்துறை திருத்தச் சட்டத்திற்கமைய அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு குற்றப்படுத்தல் பிரிவு இந்த விசாரணையை நடத்தவுள்ளது.

இதேவேளை கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியின் போது ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான ஆதாரங்களை இன்று ஐ.சி.சி.ஊழல் தடுப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவரது கருத்துக்கள் ஸ்ரீலங்காவில் மட்டுமின்றி உலகளவில் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ள நிலையில் தற்போது ஐ.சி.சி ஊழல் தடுப்பு பிரிவினர் இந்த விடயம் தொடர்பாக விசாரணையை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.