ட்விட்டரில் மீண்டும் வெரிபிகேஷன் சேவை துவக்கம்

ட்விட்டர் சேவையில் மீண்டும் வெரிபிகேஷன் சேவை துவங்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

ட்விட்டர் சமூக வலைதள சேவையில் மீண்டும் வெரிபிகேஷன் துவங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர பயன்பாட்டில் இல்லாத, முழுமை பெறாத ட்விட்டர் கணக்குகளின் வெரிபிகேஷனை நீக்கவும் அந்நிறுவனம் துவங்கி உள்ளது. 

 

 

ட்விட்டரில் வெரிபிகேஷன் பெறுவதற்கான விதிமுறைகளில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இவை பயனர்கள் வழங்கிய கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது.

 

 கோப்புப்படம்

 

அதன்படி இனிமேல், ட்விட்டரில் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் பாளோவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வெரிபிகேஷன் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக இது குறிப்பிட்ட நாட்டில் உள்ள பாளோவர்கள் எண்ணிக்கையை கொண்டு வழங்கப்பட்டு வந்தது.

 

இத்துடன் வெரிபிகேஷன் வழங்க முன்பை விட அதிக பிரிவுகளை சேர்க்க ட்விட்டர் திட்டமிட்டு உள்ளது. அதன்படி கல்வி, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மத தலைவர்கள் உள்ளிட்ட பிரிவுகள் சேர்க்கப்பட இருக்கின்றன. 

 

தற்சமயம் இந்த பிரிவுகளை சேர்ந்தவர்கள் ட்விட்டரில் ஆர்வலர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இதர பிரிவுகளை தேர்வு செய்து வெரிபிகேஷனுக்கு விண்ணப்பிக்கலாம். 

 

ட்விட்டர் வலைதளம் அல்லது செயலியின் அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில் இருக்கும் ‘Request Verification’ ஆப்ஷனை க்ளிக் செய்து, தேவையான ஆவணங்களை சமர்பித்து வெரிபிகேஷனுக்கு விண்ணபிக்க முடியும்.