பண்டாரவளை பிரதேசத்தில் மூவருக்கு கொரொனா தொற்றுறுதி...!

பண்டாரவளை பிரதேசத்தில் மூவருக்கு கொரொனா தொற்றுறுதி...!

பண்டாரவளை - கினிகம பகுதியில் மேலும் மூன்று பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

பண்டாரவளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் பெண் ஒருவருக்கு முன்னதாக கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேருக்கே இவ்வாறு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் குறிப்பிட்டுள்ளது