அதிக பயனர்களால் முடங்கிய மெசேஜிங் ஆப்

ஒரே சமயத்தில் அதிகளவு பயனர்கள் இன்ஸ்டால் செய்ததால் முடங்கிய மெசேஜிங் ஆப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக திடீரென பிரபலமான சிக்னல் ஆப் உலகளவில் அதிக பயனர்கள் இன்ஸ்டால் செய்ததால் முடங்கி உள்ளது. நேற்று (ஜனவரி 15) முதல் முடங்கி இருக்கும் சிக்னல் செயலியை சரிசெய்யும் பணிகளில் அதன் டெவலப்பர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

விரைவில் சிக்னல் செயலி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்து வருகிறது. ஒரே சமயத்தில் பல லட்சம் பேர் திடீரென சிக்னல் செயலியை பயன்படுத்த துவங்கியதே சேவை முடங்க காரணம் ஆகும்.

 

தற்சமயம் இந்த குறைபாட்டை சரி செய்து சேவை மீண்டும் சீராக இயங்க வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிக்னல் செயலி சிக்னல் பவுன்டேஷன் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். கூகுள் பிளே ஸ்டோரில் சிக்னல் செயலியை ஐந்து கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.