மாணவர்களுக்கான மகிழ்ச்சியான தகவல் - சற்றுமுன்னர் வெளியான செய்தி

மாணவர்களுக்கான மகிழ்ச்சியான தகவல் - சற்றுமுன்னர் வெளியான செய்தி

கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தனியார் மேலதிக வகுப்புக்களை மீள ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கள் கிழமை முதல் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்கமுடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தனியார் மேலதிக வகுப்புக்களுக்கு 500 மாணவர்கள் வரை இணைத்துக்கொள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.