மாத்தளை வைத்தியசாலையின் சுவாச நோய் விடுதி மூடல்

மாத்தளை வைத்தியசாலையின் சுவாச நோய் விடுதி மூடல்

 மாத்தளை வைத்தியசாலையின் சுவாச நோய் விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சுவாச நோய் விடுதியில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாத்தளை வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் பிரசாந்த் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

அடையாளம் காணப்பட்ட இரண்டு கொரோனா நோயாளர்களும் தெல்தெனிய கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நோயாளர்களுடன் நெருங்கி பழகிய 04 பேருக்கு PCR சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையின் ஏனைய ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளதாகவும் மாத்தளை வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் பிரசாந்த் ஜயசுந்தர தெரிவித்தார்.