ஒரு மாதத்திற்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் கொரோனா காரணமாக ஒருவர் பலி

ஒரு மாதத்திற்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் கொரோனா காரணமாக ஒருவர் பலி

அவுஸ்திரேலியாவில் ஒரு மாதத்திற்கு பின்னர், கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

விக்டோரியா மாநிலயத்தில் 80 வயதுடைய ஒருவரே இன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

கடந்த 24 மணிநேரத்தில் 30 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

 

இதற்கமைய, அவுஸ்திரேலியாவில் இதுவரை வைரஸ் தொற்றுறுதியானவர்கின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 521 ஆக அதிகரித்துள்ளது.

 

6 ஆயிரத்து 915 பேர் குணமடைந்துள்ள நிலையில், 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இதேவேளை, வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழ்நாட்டவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக மேலும் 29 விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

வந்தே பாரத் திட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் நடவடிக்கையில்,  வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

இதன்போது, மத்திய அரசு குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.

 

வெளிநாடுகளில் இருந்து இதுவரை 50 விமானங்கள் மூலம், 26 ஆயிரம் தமிழர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்ததுள்ளது.