20,000 பேருக்கான வேலைகள் ஆபத்தில் இருப்பதாக விமான நிலையங்கள் எச்சரிக்கை

20,000 பேருக்கான வேலைகள் ஆபத்தில் இருப்பதாக விமான நிலையங்கள் எச்சரிக்கை

பயணச்சரிவு தொடர்ந்து வருவதால் 20 ஆயிரம் பேருக்கான வேலைகள் ஆபத்தில் இருப்பதாக இங்கிலாந்து விமான நிலையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மேலும் விமான நிலையங்களில் எதிர்கால பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் 50 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விமான நிலைய செயற்பட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

எனவே நாட்டின் விமான நிலையங்கள் எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடியை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் மற்றும் இங்கிலாந்து விமான சேவையை ஆதரிக்கவும் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட விமான நிறுவனங்களான பிரிட்டிஷ் எயார்வேஸ், விர்ஜின் அட்லாண்டிக் மற்றும் ஈஸிஜெட் (EZJ.L) ஏற்கனவே 20,000 க்கும் மேற்பட்ட வேலை இழப்புகளை அறிவித்துள்ளன.

இதேவேளை நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான ஹீத்ரோ, தன்னார்வ பணியாளர்களை நீக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.