கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொள்கலன்களுக்கு பற்றாக்குறை..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொள்கலன்களுக்கு பற்றாக்குறை..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொள்கலன்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையால் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

தற்போது கொள்கலன்களுக்கான குத்தகை பணம் மூன்று மடங்கினால் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொள்கலன் கப்பல்கள் சில நாடுகளில் சிறைப்பட்டுக் கிடக்கின்றமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் கப்பல் உரிமையாளர்கள் கொள்கலன்களுக்கான பற்றாக்குறையை செயற்கையாக ஏற்படுத்தி கொள்கலன்களுக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளதாக பூகோள கப்பல் சங்கத்தின் தலைவர் ஷோன் வென்டொட் தெரிவித்துள்ளார்.