மது போதையில் வாகனம் செலுத்திய 948 பேர் கைது

மது போதையில் வாகனம் செலுத்திய 948 பேர் கைது

மேல்மாகாணத்தில் இரவு நேர விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 948 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 17ஆம் திகதி இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளில் 6,981 சாரதிகளுக்கு எதிராக வேறு சில குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.