பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பான மனு நிராகாிப்பு!

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பான மனு நிராகாிப்பு!

பல்கலைக்கழகங்களுக்கு பொறியியல் மற்றும் பௌதீக விஞ்ஞான பீடங்களுக்காக புதிய மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் வெளியிட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோாி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உாிமை மீறல் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டதையடுத்து அது நிராகாிக்கப்பட்டது.

2019ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தின்கீழ் தோற்றிய 42 மாணவர்களால் குறித்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.