தென் கொரியா: எதிரான ‘இராணுவ நடவடிக்கையை இடைநிறுத்தினார்’ கிம்..!

தென் கொரியா: எதிரான ‘இராணுவ நடவடிக்கையை இடைநிறுத்தினார்’ கிம்..!

தென் கொரியாவுக்கு எதிரான “இராணுவ நடவடிக்கை” திட்டங்களை வட கொரியா இடைநிறுத்தியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை விமர்சிக்கும் மற்றும் மனித உரிமைகளை ஆட்சி புறக்கணிப்பது போன்ற வழக்கமாக பலூன்கள் வழியாக அனுப்பப்படும் எல்லை தாண்டிய துண்டுப்பிரசுரங்களினால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் சில காலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளை பிளவுபடுத்தும், இராணுவமயமாக்கப்பட்ட எல்லைப் பகுதிக்கு துருப்புக்களை அனுப்புவதாகவும் வடகொரியா அச்சுறுத்தல் விடுத்திருந்தது.

ஆனால் தலைவர் கிம் ஜோங்-உன் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில், இராணுவ நடவடிக்கையை இடைநிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.