கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24- 1927

கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24- 1927

தமிழ் சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான கண்ணதாசன் 1927-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி தமிழ்நாடு மாநிலம் சிறுகூடல் பட்டியில் பிறந்தார். இவருடைய தந்தை சாத்தப்பனார், தாய் விசாலாட்சி ஆச்சி. இவருடன் உடன் பிறந்தோர் 8 பேர். சிறுவயதிலேயே இவரை ஒருவர் ரூ.7000-க்கு தத்து எடுத்து வளர்த்தார். அவருடைய வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வளர்ந்தார். எட்டாம் வகுப்பு வரை படித்த கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24- 1927 தமிழ் சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான கண்ணதாசன் 1927-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி தமிழ்நாடு மாநிலம் சிறுகூடல் பட்டியில் பிறந்தார். இவருடைய தந்தை சாத்தப்பனார், தாய் விசாலாட்சி ஆச்சி. இவருடன் உடன் பிறந்தோர் 8 பேர். சிறுவயதிலேயே இவரை ஒருவர் ரூ.7000-க்கு தத்து எடுத்து வளர்த்தார். அவருடைய வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வளர்ந்தார். எட்டாம் வகுப்பு வரை படித்த கண்ணதாசன் 1943-ஆம் ஆண்டு திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். கண்ணதாசனுக்கு பொன்னம்மா, பார்வதி, வள்ளியம்மை என்று 3 மனைவிகள். மூவருக்கும் சேர்த்து மொத்தம் 14 குழந்தைகள் பிறந்தனர். இந்து மதத்தில் பிறந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர். இவர் 4000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5000-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் நவீனங்கள், கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் இருந்துள்ளார். சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார். உடல்நிலை காரணமாக 1981-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24-ந் தேதி சிகாகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர்-17 சனிக்கிழமை இறந்தார். அக்டோபர் 20-இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு லட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர்-22 இல் எரியூட்டப்பட்டது. தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்றும் உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.