சீனாவின் வுஹான் நகருக்கு செல்லவுள்ள 10 சர்வதேச விஞ்ஞானிகள்

சீனாவின் வுஹான் நகருக்கு செல்லவுள்ள 10 சர்வதேச விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராய 10 சர்வதேச விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்று அடுத்த மாதம் சீனாவின் வுஹான் நகருக்கு செல்லவுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுயாதீன விசாரணை ஒன்றை மேற்கொள்ள சீனா தயக்கம் காட்டி வருவதுடன், உலக சுகாதார ஸ்தாபனம் அந்த நகரை அணுக அனுமதிக்க பல மாத கால இணக்கப்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வுஹான் நகரில் உள்ள விலங்குகளை விற்பனை செய்யும் சந்தை ஒன்றிலிருந்து வைரஸ் பரவியதாக கருதப்படுகிறது.

ஆனால், வைரஸின் மூலத்திற்கான தேடல், குறிப்பாக அமெரிக்காவுடன் பதற்றங்களுக்கு வழிவகுத்தது.

ஆரம்ப பரவலை மறைக்க சீனா முயற்சிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.