எல்லைப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்தது இந்தியா!

எல்லைப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்தது இந்தியா!

லடாக்கின் 4 எல்லைகளிலும் சீனா, நேபாள எல்லைகளிலும் ஆளில்லா விமான கண்காணிப்புகளை இந்திய அரசாங்கம் அதிகரித்துள்ளது.

இராணுவம் மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை இப்பகுதியில் அதிக கண்காணிப்பு ஆள் இல்லா விமானங்களை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கமைய மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிக ஆள் இல்லா விமானங்களை பெறுவதற்கு இராணுவத்திற்கு மிக உயர்ந்த மட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு பயன்படுத்தும் இஸ்ரேலிய ஹெரான் நடுத்தர உயரமுள்ள நீண்ட ஆள் இல்லா விமானம் இப்பகுதியின் தொழில்நுட்ப கண்காணிப்பை வழங்குகிறது.

இஸ்ரேல் அல்லது அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15-ந் திகதி  இந்திய இராணுவத்துக்கும்,  சீன இராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.