நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 406 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 438 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் 26 ஆயிரத்து 290 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் தொற்றுதியான 6 ஆயிரத்து 723 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் ஒன்று முதல் 10 வரையான வயதுடையவர்களில் 451 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் கொவிட்-19 தரவு தளத்தில் இந்தத் தகவலை அறியக்கூடியதாக உள்ளது.

கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில் வயது அடிப்படையிலான தரவுகள் இந்தத் தரவு தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன்படி, ஒன்று முதல் 10 வரையான வயதுடைய 451 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

11 முதல் 20 வயதிற்குப்பட்ட ஆயிரத்து 285 பேருக்கும், 21 முதல் 30 வயதுக்குட்பட்ட 3 ஆயிரத்து 352 பேருக்கும், கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

31 முதல் 40 வயதுக்குட்பட்ட 3 ஆயிரத்து 469 பேருக்கும், 41 முதல் 50 வயதுக்குட்பட்ட 2 ஆயிரத்து 759 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

51 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆயிரத்து 917 பேருக்கும், 61 முதல் 70 இடைப்பட்ட 727 பேருக்கும், கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

71 முதல் 80 வயதிற்குப்பட்ட 296 பேருக்கும், 80 வயதிற்கு மேற்பட்ட 72 பேருக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளாதாக ஜனாதிபதி அலுவலகத்தின் கொவிட்-19 தரவு தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரையில் 26 ஆயிரத்து 38 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

எனினும், இந்த வயது அடிப்படையிலான தரவுகளில் 14 ஆயிரத்து 328 பேரின் விபரங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.

இதேநேரத்தில், ஆகக்கூடிய வயதுடைய கொவிட்-19 நோயாளராக 99 வயதுடைய நபர் பதிவாகியுள்ளதாக ஜனாதிபதி அலுவலத்தின் கொவிட்-19 தரவு தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது

இதேவேளை கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கண்டி நகரஎல்லைக்கு உட்பட்ட 45 பாடசாலைகளை தொடர்ந்தும் ஒரு வாரகாலத்துக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.