ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட அதிசயம்! வியப்பில் மக்கள்

ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட அதிசயம்! வியப்பில் மக்கள்

ஸ்ரீலங்காவில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்காவை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்காக திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடலுக்கு மேல் அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பூங்கா அதிசய நிகழ்வாகும் என பலர் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

2021 க்குள் குறித்த திட்டத்தை முடிப்பதற்கான கட்டுமான பணிகளை கொழும்பு துறைமுக நகர பிரைவேட் லிமிடெட் துரிதப்படுத்தியுள்ளது என்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடற்கரை பூங்கா, குழந்தைகள் பூங்கா, படகு தரித்து நிற்கும் இடங்கள், உணவகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல பொழுதுபோக்கு வசதிகளுடன் 2 கி.மீ நீளமுள்ள கடற்கரை பிரதேசம் தற்போது கட்டப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடல் அலைகளை தடுப்பதற்கு சராசரி கடல் மட்டத்திலிருந்து 4.5 மீட்டர் உயரத்தில் 3.2 கி.மீ நீளமுள்ள இடைவெளியிலான கட்டுமானப் பணிகள் ஏற்கனவே நிறைவுற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.

இதேவேளை கொழும்பு துறைமுக நகருக்கு வருவதற்கு பொதுமக்களுக்கு இலவச அனுமதிக வழங்கப்படும் என்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.