குற்றம் புரிவதற்கான பயிற்சி கல்லூரியாக சிறைச்சாலை மாறியுள்ளது...!

குற்றம் புரிவதற்கான பயிற்சி கல்லூரியாக சிறைச்சாலை மாறியுள்ளது...!

குற்றங்களை புரிவதற்கான பயிற்சி கல்லூரியாக சிறைச்சாலை மாறியுள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

சிறைச்சாலைகளில் சட்டத்தின் ஆதிக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது.

மிகவும் மோசமான அதிகாரிகள் சிறைச்சாலையில் இருக்கின்றனர்.

குற்றங்களை செய்வதற்கான பயிற்சி நிலையமாக மாறியுள்ளது.

குற்றங்களில் ஈடுபடும் பிரபலமான குழுக்கள் அங்குதான் உருவாகின்றன.

பாதாள உலகக் குழுவினர் வெளியே ஒரு தரப்பினரும், உள்ளே ஒரு தரப்பினரும் இருக்கின்ற நிலையில், அவர்கள் இரு தரப்பினரும் தொடர்புபடுகின்றனர்.

தாங்கள் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால், சட்டத்தினாலேயே தாங்கள் பாதுகாக்கப்படுவீர்கள் என்றும் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.

போதைப்பொருட்கள் உள்ளே வருவதும், கைத்தொலைபேசி உள்ளிட்ட தொடர்பாடல் முறையை ஊடாக குற்றவாளிகள் செயற்படுகின்ற நிலையில், அதனை நிறுத்த வேண்டும்.

அதிகாரிகள் பணியாளர்களாக மாறியுள்ளனர்.

அதனை நிறுத்த வேண்;டும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

உள்ளே இருக்கும் குழுக்களை பிரிக்க வேண்டும் என்றும், வெளியே இருக்கும் பாதாள குழுவை விடவும், உள்ளே இருக்கும் பாதாள குழு செயற்பாடுகள் பிரபலமானது.

இவ்வாறான நிலையில், சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு செய்தி ஒன்றை வழங்குவதற்கே தாம் சிறைச்சாலைக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகள், கைதிகள் என எவராக இருந்தாலும் தனக்கு பிரச்சினை இல்லை என்றும், தராதரம் பாராமல், சட்டத்தை கடுமையாக தாம் நடைமுறைப்படுத்துவதாகவும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கூறியுள்ளார்.