கண்ணாடி டம்ளரில் டீ விற்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்- மாநகராட்சி

கண்ணாடி டம்ளரில் டீ விற்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்- மாநகராட்சி

நாகர்கோவில் மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்சால் கூறியதாவது:-

 நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள டீக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு கண்ணாடி மற்றும் சில்வர் தம்ளர்களில் டீ, காபி விற்பனை செய்யக்கூடாது என்றும், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய அலுமினிய பாயில் கப்புகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதை மீறும் டீக்கடைகள் நகராட்சி ஆணையர் உத்தரவுபடி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பூட்டி சீல் வைக்கப்படும்.

இவ்வாறு கின்சால் கூறினார்.