வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கையர்களின் பதிவு பல கட்டங்களாக இடம்பெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.

இதன்படி, ஹாங்கொங், ருமேனியா, போலாந்து மற்றும் செக் குடியரசிற்கான பதிவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நாடுகளில் வேலை தேடுபவர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான விளம்பரங்களை வெளியிட உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு முகமைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே இதனை தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா வைரஸ் பரவுவதால் வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும் நபர்களின் பதிவு நடவடிக்கைகள் மார்ச் 13ம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதற்கட்டமாக மே 20ம் திகதி வெளிநாட்டு பயணம் செய்வதற்கான பதிவு நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டது.

தென் கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு வேலைக்கு செல்ல இதன்போது அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.