இன்றைய தினம் சந்திப்பு

இன்றைய தினம் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கிடையே இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் நான்கு மணியளவில் இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை பொதுத் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜுலை 14ஆம்இ 15ஆம்இ 16ஆம் 17 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த தினங்களில் வாக்களிக்க தவறுபவர்கள் ஜுலை மாதம் 20ஆம்இ 21 ஆம் திகதிகளில் வாக்களிக்கலாம் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அஞ்சல்மூல வாக்காளர்களின் பெயர்ப்பட்டில் எதிர்வரும் 18 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படவுள்ளது. இதையடுத்து வாக்குச் சீட்டுக்களை விநியோகித்தல் மற்றும் அஞ்சலுக்கு கையளித்தல் என்பன இந்த மாதம் 30ஆம் திகதியும்இ ஜுன் மாதம் முதலாம்இ இரண்டாம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை 2020 பொதுத் தேர்தலுக்கான  உத்தியோகபூர்வ வாக்காளர் அடையாள அட்டை ஜுலை 11ஆம்இ 12ஆம்இ 13ஆம் திகதிகளில் அஞ்சலுக்கு கையளிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.