நீட் தேர்வில் தமிழக அரசு பள்ளி மாணவன் 664 மதிப்பெண் பெற்று சாதனை

நீட் தேர்வில் தமிழக அரசு பள்ளி மாணவன் 664 மதிப்பெண் பெற்று சாதனை

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில், தமிழக அரசு பள்ளி மாணவன் 664 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு 1.21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 99,610 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 57,215 பேர் தேர்ச்சி பெற்யுள்ளனர். இது 57.44 சதவீத தேர்ச்சியாகும். கடந்த ஆண்டில் 48.73 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

 

பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு படித்த ஜீவித்குமார் 664 மதிப்பெண்கள் பெற்ற இந்தியா அளவில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு குறைவான மார்க் கிடைத்ததால் ஆசிரியர்கள் நிதியளிக்க தனியாக பயிற்சி மேற்கொண்டு இந்த வருடம் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்.

 

திருப்பூர் மாணவர் ஸ்ரீஜன் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் - அகில இந்திய அளவில் 8வது இடம். ஒடிசா மாணவன் 99.99 சதவீத மதிப்பெண் பெற்று இந்தியா அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளன.