ஏசி இறக்குமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைக்கவும் ஏசி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏசி இறக்குமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் லாரிகளில் பயன்படுத்தப்படும் நியூமேட்டிக் டயர்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைக்கவும் ஏசி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் 36,000கோடி ரூபாய் முதல் 42,000 கோடி ரூபாய் வரை ஏசிகள் விற்பனையாகின்றன. இதில் பெரும்பான்மையான பகுதி இறக்குமதி செய்யப்படும் நிலையில் தற்போது ஏசி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுங்க வரி அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப தர கட்டுப்பாடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல வழிகளில், இறக்குமதியை ஒழுங்குபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனையடுத்து இறக்குமதி கொள்கையில் செய்யப்பட்ட மாற்றம் குறித்து, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.