தலவாக்கலை - டயகம பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

தலவாக்கலை - டயகம பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

லிந்துலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை - டயகம பிரதான வீதியின் அக்கரகந்த - ஸ்பெஸிபன் பிரதேசத்தில், சீரற்ற வானிலை காரணமாக இன்று அதிகாலை மரம் ஒன்றுடன் பாரிய மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக தலவாக்கலையிலிருந்து டயகம மற்றும் எல்டின் ஆகிய பிரதேசங்களுக்கான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. 

எனவே, குறித்த பகுதிகளுக்கு போக்குவரத்தில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ள வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்