கொரோனாவுடன் வாழப் பழக வேண்டும்! சுதத் சமரவீர அறிவுரை

கொரோனாவுடன் வாழப் பழக வேண்டும்! சுதத் சமரவீர அறிவுரை

கோவிட் -19 வைரஸ் உலகளாவிய தொற்றுநோய் என்றும் அதை இலங்கையில் மட்டும் கட்டுப்படுத்துவதன் மூலம் அதை முற்றிலுமாக ஒழிக்க முடியாது என்று தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

"கோவிட் -19 ஒரு உலகளாவிய தொற்றுநோய். அது இன்று அல்லது நாளை முடிவடையும் ஒன்று அல்ல. நம் நாட்டில் மட்டும் இதைக் கட்டுப்படுத்தி சுதந்திரமாக வாழ முடியாது. அதனால்தான் கோவிட் -19 உலகில் ஒழிக்கப்படும் வரை நாம் கோவிட்-19 உடன் வாழ பழக வேண்டியிருக்கும்.

முன்பு போல் நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு உத்தரவை விதித்து, சமூக செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் இந்த கோவிட் -19 நோயை நாம்

தொடர்ந்து எதிர்கொள்ள முடியாது. மக்களின் இயல்பான வாழ்க்கையைக் கருதுகையில் கோவிட் -19 நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியமான ஒன்றாகும்.

க.பொ.த (உயர் தரம்) தேர்வு தொடங்கி ஒரு மாதத்திற்கு நடைபெறும். எனவே குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் இதில் பெரிய பங்கை வகிக்கின்றனர்.

மருத்துவமனைகளில் இருப்பவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் இருக்கும் மாணவர்களுக்கு தேர்வுக்கு எழுத வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கோவிட் -19 தொற்று காலத்திலும் நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்தை மிக வெற்றிகரமாக தீர்மானிக்கும் ஒரு தேர்வினை நடத்துவதே இந்த நேரத்தில் உள்ள சவால் ” என்றார்.