வடமராட்சி கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கை!

வடமராட்சி கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கை!

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கத்தினுடைய சமாசத்தின் அழைப்பின் பேரில் அந்தப் பகுதிக்கு விஜயம் செய்து பார்வவையிட்ட பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் வட பகுதி கடற்பரப்புக்களில் தென்னிலங்கை மீனவர்களின் வருகை அதிகரித்துள்ளது.

தென்னிலங்கை மீனவர்களின் கடற்றொழில் செயற்பாடுகள் காரணமாக பாரம்பரியமாக கடற்றொழிலை நம்பி வாழும் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வட பகுதி மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுத் தேர்தல் வேட்பாளரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாருமான சட்டத்தரணி மணிவண்ணன் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் காணப்படும் பகுதிகளைச் சென்று பார்வையிட்டுள்ளார்.